திடீரென பறந்து வந்த கதண்டுகள்…. சிறுமி உள்பட 11 பேர் காயம்…. கரூரில் பரபரப்பு…!!

கதண்டுகள் கடித்ததால் சிறுமி உள்பட 11 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னரெட்டிப்பட்டி பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் மண்வரப்பு அமைக்கும் பணியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென பறந்து வந்த கதண்டுகள் சின்னம்மாள்(65), மலர்(47), கவிநிதா(3), தனலட்சுமி(44), சர்வேஸ்வரன்(4), தேவிகா(35) உள்பட 11 பேரை கடித்தது. இதனால் காயமடைந்த அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவின்படி, தோகைமலை ஒன்றிய ஆணையர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் சத்தியா ராமச்சந்திரன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *