திடீரென நடந்த ஆய்வு…. கெட்டுப் போன மீன்கள் பறிமுதல்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

மீன் விற்பனை நிலையங்களில் திடீரென நடந்த ஆய்வில் 10 கிலோ கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் நகரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆனந்தன், கந்தசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆத்தோர வீதி, வர்ண தீர்த்தம், திரு.வி.க. நகர் பகுதிகளில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில் திடீரென ஆய்வில் ஈடுபட்டனர். அந்த ஆய்வில் கடைகளில் கெட்டுப்போன மீன்களை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கெட்டுப்போன 10 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை கூறியதாவது, பழைய மீன்களை விற்கவோ இருப்பு வைக்க கூடாது என்றும், விற்பனையாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறினர். மேலும் இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *