திடீரென தீப்பிடித்து எரிந்த ஜெனரேட்டர்…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…. போலீஸ் விசாரணை…!!

அச்சகத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி காரனேசன் காலணியில் ஒரு அச்சகம் அமைந்துள்ளது. இந்நிலையில் அச்சகத்தில் இருந்த ஜெனரேட்டர் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்து அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அச்சகத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த சிவகாசி கிழக்கு போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *