இந்தோனேசியா நாட்டிலுள்ள ஜெயபுராவில் சென்டாணி விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஒரு விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தின் பெயர் திரிகானா ஏர் 737-500. இந்த ரயில் புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென என்ஜின் தீப்பிடித்து எரிந்தது.அந்த விமானத்தின் இறக்கைகளில் தீப்பொறி பறந்தது.

அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை ‌ எனினும் பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக விமான நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து காரணமாக விமான பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் வேறு விமானத்தில் பயணிகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.