“திடீரென டெல்லிக்கு புறப்பட்ட ரஜினி”…. காரணம் என்ன தெரியுமா…?????

நடிகர் ரஜினி ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லி கிளம்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கின்றது.

இத்திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக செய்தி பரவி வருகின்றது. இந்த நிலையில் ரஜினி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். ரஜினி ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. சினிமா படப்பிடிப்பு தொடர்பாக பங்கேற்று ஒரு வாரம் கழித்து சென்னை திரும்புவார் என செய்தி வெளியாகி இருக்கின்றது. இதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *