திடீரென சுமார் 5 அடி ஆழம் உள்வாங்கிய வயல்…. அதிர்ச்சியடைந்த விவசாயிகள்…. திருவாரூரில் பரபரப்பு…!!!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருக்கண்டீஸ்வரம் பகுதியில் சுமார் 5 அடி ஆழத்தில் வயல் உள்வாங்கியதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருக்கண்டீஸ்வரம் ஊரில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த கொட்டிகுளம் நன்னிலம் வட்டாட்சியர் அனுமதியுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தூர்வாரப்பட்டது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில்இதுபற்றி கிராம மக்கள் சார்பாக தெரிவிக்கும்போது, பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த குளத்தை தூர்வாரியதால் இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

அந்தக் குளத்தின் மூலமாக பள்ளம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிராம மக்கள் ஒன்று கூடி கிராம கமிட்டி மூலமாக அதற்கு உரிய நிவாரணத்தை தர முடிவெடுத்திருப்பதாக கூறியுள்ளார்கள். கிராம கமிட்டி அமைக்கப்பட்டு கிராம மக்களின் நலனுக்காகவும், கொட்டி குளத்தை சுற்றி உள்ள பாசன பரப்பு பயன் பெறுவதற்காகவும், குளம் தூர்வாரப்பட்டுள்ளது. இது பற்றி மண் ஆய்வாளர்களிடம் கேட்டறிந்த போது, குளமானது தூர் வாரும்போது மூன்றடி ஆழத்திற்கு மட்டுமே மண் எடுக்க வேண்டும்.

அதை மீறி அதிக அளவு ஆழத்தில் குளம் வெட்டி இருந்தால் அருகில் உள்ள நிலப்பரப்பு மணற்பாங்கான நிலப்பரப்பாக இருந்தால், குளத்தின் கரை பல படுத்தாமல் இருந்தால் ஈர்ப்பின் காரணமாக இது போன்று மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இதுபற்றி அரசு தரப்பில் நன்னிலம் வட்டாட்சியரிடம் பேசியபோது, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்தால் அந்தப் பகுதிக்கு வராதவாறு தடுப்புகளை ஏற்படுத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *