திடீரென ஏற்பட்ட கோளாறு… ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு … தாசில்தார் சிறப்பு ஏற்பாடு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தில் நேற்று வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே அம்மாபட்டி பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அதன்பின் எந்திரம் சரி செய்யப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.

வாக்குச்சாவடி மையத்தில் உள்ள இந்த வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குபதிவு இயந்திரத்தில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக மதியம் 2.55 மணி முதல் 3.55 மணிவரை வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து நத்தம் தாசில்தார் விஜயலட்சுமி, தேர்தல் நடத்தும் சிறப்பு அலுவலர் திருமலை ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்குப்பதிவு நடைபெற ஏற்பாடு செய்தனர்.