திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6 .1 ஆக பதிவு…. தகவல் வெளியிட்ட தேசிய நிலநடுக்கவியல் மையம் ….!!

நியூ கலிடோனியாவில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நியூ கலிடோனியாவில்  நௌமியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று  அதிகாலை உள்ளூர் நேரப்படி 2 மணியளவில் திடீரென  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என  தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நௌமியா நகருக்கு கிழக்கே 477 கிமீ தொலைவில் 170 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *