திங்கள் கிழமை பள்ளிக்கு வந்தால் செவ்வாய் விடுமுறை…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் பொரோனோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நவம்பர் 1 முதல் தொடக்கப்பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அதில் காலை முதல் மாலை வரை வழக்கம்போல் முழுநேரமும் வகுப்புகள் நடைபெறும். திங்கட்கிழமை ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால் செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை. மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை. விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம். ஆன்லைன் வகுப்பு மூலமாகவும் மாணவர்கள் படிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *