டெல்லியில் உள்ள சாஹிபாத் பகுதியில் ஒரு திருமண ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. முதல் கட்டமாக மணமக்கள் மாலையை மாற்றிக் கொண்டனர். மத சடங்குகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் மணமகன் திடீரென பாத்ரூம் செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து பாத்ரூமில் இருந்து வெளியே வரும்போது மணமகன் லேசாக தள்ளாடியபடி வந்தார். அவரது செயல்பாட்டில் மணமகள் வீட்டிற்கு சந்தேகம் ஏற்பட்டது. அடிக்கடி மணமகன் பாத்ரூமுக்கு சென்று வந்தார்.

கடைசியாக பாத்ரூம் சென்ற மணமகன் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார் பாத்ரூமுக்கு சென்று பார்த்தனர். அப்போது மணமகன் நண்பர்களுடன் இணைந்து மது குடித்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றது. போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அதில் உடன்பாடு எட்டவில்லை. மாப்பிள்ளை வீட்டார் 10 லட்ச ரூபாய் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இறுதியில் திருமணம் நிறுத்தப்பட்டது.