தாலி கட்டும் நேரத்தில்… மணமகன் மடியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண்… பரபரப்பு…!!!

தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் முன் மயங்கி விழுந்து மணமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

விசாகப்பட்டினத்திலுள்ள மதுரவாடா தெலுங்கு தேசம் கட்சியின் இளைஞரணி தலைவரான சிவாஜிக்கும், சுஜனா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடக்க இருந்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து மிகவும் பிரம்மாண்டமாக செய்துவந்தனர். இதற்கிடையில் தாலி கட்டுவதற்கு முன் மந்திரங்கள் சொல்லி சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென்று மணமகள் சுஜனா மயங்கி மணமகன் மடியில் உயிரிழந்தார்.

இதை பார்த்து அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் மணமகள் விஷம் குடித்து இறந்ததாக தெரியவந்துள்ளது. திடீரென்று மணமகள் திருமணத்தின் அன்று விஷம் குடித்து உயிரை விடுவதற்கு என்ன காரணம் என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *