தாறுமாறாக ஓடிய மினி வேன்…. சாலையில் கவிழ்ந்து விபத்து…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருந்து பலவகை பொருட்களை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நடுவட்டம் அருகில் உள்ள டி.ஆர் பஜார் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான மினி வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *