விருதுநகர் அருகே ஆர்.ஆர் நகர் பகுதியில் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் அரசு பேருந்து பாலத்தில் மோதி கவிழ்ந்ததில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கோவையிலிருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற அந்த பேருந்தை முருக பூபதி என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார். அதிகாலை 5.10 மணி அளவில் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் அரசு பேருந்து பாலத்தில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்து பேருந்தின் நான்கு சக்கரங்களும் உடைந்து சிதறி 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ஓடி வந்து பேருந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த பொதுமக்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வருவதற்குள் அந்த வழியாக சென்ற வாகனங்களின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம்