தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுப்பட்டி அரசு கலைக்கல்லூரி மாணவிகள் விடுதிக்கு எதிரே அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு ராஜம்மாள் என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் முகமூடி அணிந்த வாலிபர் கத்தியை காட்டி மூதாட்டியை மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க நகையை கழற்றி கொடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போதும் மூதாட்டி நகையை கழற்ற மறுத்துவிட்டார்.

இதனால் செய்வதறியாது நின்ற வாலிபர் தனது தாய்க்கு உடம்பு சரியில்லை. மருந்து மாத்திரை வாங்குவதற்கு பணம் இல்லாததால் வேறு வழி தெரியாமல் இருக்கிறேன். தயவு செய்து நகையை கொடுத்து விடுங்கள் என மூதாட்டியிடம் கெஞ்சி கேட்டுள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டி அணிந்திருந்த மூன்று பவுன் தங்க நகையை பறித்து விட்டு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.