தாயில்லாத பிள்ளைங்க நாங்க…. என்க கஷ்டம் கொஞ்சநஞ்சமில்ல – ஆர்.பி உதயகுமார் உருக்கம்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

அந்தவகையில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தாயில்லா பிள்ளைகள் நாங்கள் எங்களை கைவிட்டு விடாதீர்கள் என்றும், அம்மா ஜெயலலிதா இல்லாமல்  நாங்கள் படும் கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்லை என்று உருக்கமாக பேசியுள்ளார்.