தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தாம்பரம்-கடற்கரை இடையில் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இருப்பதாவது “பராமரிப்புபணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் “தாம்பரம்-சென்னை கடற்கரை இடையில் இரவு 10:;25 மணி, 11:25 மணி மற்றும் 11:45 மணிக்கும்,

மறுமார்க்கமாக கடற்கரை -தாம்பரம் இடையே இரவு 11:20 மணி, 11:40 மணி மற்றும் 11:59 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் நாளை (ஜூலை.5) முதல் 8ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *