தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு மாணவிகள் நெல்லை காரை யார் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் உடல்களை மீட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.