தாத்தா, பாட்டி இல்லை எனும் கவலை இனி இல்லை…. வந்தாச்சு சூப்பர் வாய்ப்பு….!!!

கோயம்புத்தூரில் மூத்த குடிமக்கள் இணைந்து ஆன்லைன் ரேடியோ நடத்தி வருகின்றனர். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

கோவை மாவட்டம், மாதம்பட்டி பகுதியில் தபோவனம் என்ற இடத்தில் மூத்த குடிமக்களுக்கான குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் 250க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கியுள்ளனர். இந்த குடியிருப்புகளில் தங்கி இருக்கும் முதியவர்கள் அனைவரும் இணைந்து ஆன்லைன் ரேடியோவை நடத்திவருகின்றனர். ஒவ்வொரு மூத்த குடிமக்களும் தங்களால் முடிந்த செயல்களை செய்து வருகின்றனர். அதன்படி கதை சொல்வது, கர்நாடக இசை அமைப்பது, பாட்டு பாடுவது, பதிவு செய்தவற்றை எடிட்டிங் செய்வது என்று ஒவ்வொரு வேலையையும் செய்துவருகின்றனர்.

ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் இந்த ஆன்லைன் ரேடியோவில் சொல்லப்பட்டு வருகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் உள்ள குழந்தைகள் அனைவரும் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்வார்கள். அவர்கள் கூறும் கதைகள் அவர்கள் கற்றுக் கொடுக்கும் பழக்கவழக்கங்கள், பண்பாடு ஆகியவற்றை கேட்டு வளர்வார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகள் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் இல்லாமல் தனித்து வாழ்கின்றனர். ஏனெனில் திருமணமான பிறகு தனி குடும்பம் என்று வந்துவிடுவதால் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு என்பது கிடைக்காத ஒன்றாக மாறிவிட்டது. அதுமட்டுமில்லாமல் குழந்தைகளை பிரிந்து தனிமையில் இருக்கும் முதியவர்களுக்கும் இதுபோன்ற ரேடியோக்களில் தங்களால் முடிந்த பங்களிப்பை செலுத்துவது அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் வகையில் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *