தாத்தாவுடன் மாடு மேய்க்க சென்ற சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலபுலியூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் ஜெயசக்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஜெயசக்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்லாநத்தம் கிராமத்தில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் தாத்தாவுடன் ஊனத்தூர் ஏரி பகுதிக்கு மாடு மேய்க்க சென்ற ஜெயசக்தி ஏரியில் விளையாடி கொண்டிருந்தார்.

இதனையடுத்து திடீரென ஜெய்சக்தி காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஏரிக்குள் இறங்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த ஜெயசக்தியின் உடலை மீட்டனர். பின்னர் சிறுவனின் உடல் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.