இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி முடிந்த பிறகும் ஒரு சில இடங்களில் வாலிபர்கள் பட்டாசு வெடித்து வருகின்றனர். பட்டாசு வெடிக்கும் போது ஒரு சில விபத்துகளும் நடக்கிறது. இந்த நிலையில் பீகாரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தரையில் வைத்து ராக்கெட் கொளுத்தினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் வந்த முதியவரின் வேட்டியில் சிக்கி ராக்கெட் வெடித்தது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த வாலிபரின் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.