“தாதாபாய் நவ்ரோஜியின் லண்டன் வீடு”… புளூ பிளேக் என்னும் புதிய கௌரவம்…!!!!!

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் முன் வரிசையில் வைத்து போற்றப்படுகின்ற தலைவர்களில் ஒருவராக தாதாபாய் நவ்ரோஜி கருதப்படுகிறார். இவர் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவர். இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் திகழ்ந்துள்ளார். இவர் இந்தியாவின் முதுபெரும் கிழவர் எனவும் அழைக்கப்பட்டுள்ளார். இவர் தெற்கு லண்டனில் 8 வருட காலம் வாழ்ந்த வீடு நீலப் பலகையுடன் கவுரவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இங்கிலாந்தில் இந்த நீலப் பலகை நினைவு கவுரவத் திட்டம் என்பது இங்கிலீஷ் ஹெரிடேஜ் தொண்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகின்றது. இது லண்டனில் உள்ள முக்கிய கட்டிடங்களில் வரலாற்று முக்கியத்துவத்தை மதித்து போற்றி  கவுரவிக்கின்றது. அந்த வகையில் தான் இந்த வருடம் இந்தியாவின் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு தாதாபாய் நவ்ரோஜியின் லண்டன் இல்லம் நீலப் பலகையுடன் கவுரவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தாதாபாய் நவ்ரோஜியின் சிறப்பு செங்கல் வீட்டில் தற்போது தாதாபாய் நவ்ரோஜி (1825-1917) இந்திய தேசிய வாத மற்றும் எம்பி இங்கு வாழ்ந்தார் என நீலப் பலகையில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னிட்டு இங்கிலீஷ் ஹெரிடேஜ் அமைப்பு விடுத்திருக்கின்ற அறிக்கையில் நவ்ரோஸ் இங்கிலாந்துக்கு 7 பயணங்களை மேற்கொண்டுள்ளார். லண்டனில் தனது நீண்ட ஆயுளில் 30 வருடங்களுக்கு மேலாக கழித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *