தாங்க முடியாத வலி…. மனநலம் பாதிக்கப்பட்டவர் செய்த காரியம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகபாளையம் கிராமத்தில் கலியபெருமாள்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட கலியபெருமாள் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வலி தாங்க முடியாமல் கலியபெருமாள் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கலியபெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *