“தவறான பரப்புரைகள்”…. காவல்துறையில் சமூக ஊடக சிறப்பு மையம்…. நிதியமைச்சர் அறிவிப்பு…!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.தமிழக காவல்துறையில் சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை நிதியமைச்சர் வாசித்து வருகிறார். அதில் சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பரப்புரைகளில் விளைவாக அதிகரிக்கும் குற்றச் செயல்களை தடுத்திட சமூக ஊடக சிறப்பு மையம் காவல்துறையில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.