தவறவிடாதீர்கள்.. கால்நடை பராமரிப்பு துறையில் வேலை..!!

கால்நடை பராமரிப்பு துறையில் அருமையான வேலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள்..!

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள்22

கல்வித் தகுதி :

8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

18 – 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

அருந்ததியினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 35 வயது வரையில் இருக்கலாம்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) 32 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

சம்பளம்: 

நிலை 8-ன்படி, மாதம் ரூ.19,500 – ரூ.62,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

இப்பணிக்கு அதிகப்படியான தகுதிகள்:

தமிழில் நன்கு எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட கால்நடை பராமரிப்புத் துறையில் ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல அலுவலகத்திலோ, அல்லது www.namakkal.nic.in என்னும் இணையதளத்திலோ விண்ணப்பம் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து மார்ச் 20 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல இணை இயக்குநர்,

கால்நடை பராமரிப்புத்துறை,

5/234, ஆசிரியர் காலனி,

மோகனூர் ரோடு,

நாமக்கல் – 637 001.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2020/03/2020031147.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *