70 வயது முதியவர் ஒருவர் தனது மகனின் மனைவியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகில் தினம் தோறும் புதுவிதமான சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு பலரையும் வியக்க வைக்கின்றன. அதிலும் குறிப்பாக அடிக்கடி திருமண சம்பவங்கள் நிகழ்கின்றது. அதன்படி தற்போது உத்திர பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் 70 வயது முதியவர் தனது 28 வயது மருமகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்தப் பகுதியில் நீண்ட காலமாக வசித்து வந்த கைலாஷ் யாதவ் என்ற எழுபது வயது முதியவர் தனது மருமகளை திருமணம் செய்துள்ளார். இந்த முதியவரின் மனைவி 12 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.

இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். அதில் மூன்றாவது பிள்ளையின் மனைவி பூஜா. இந்த முதியவரின் மகன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால் பூஜா மற்றொரு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். சில காலம் மாமனார் வீட்டில் பூஜா தங்கி இருந்த நிலையில் மாமனாருடன் காதல் வயப்பட்டார். இதனால் யாரையோ திருமணம் செய்து கொள்வதற்கு மாமனாரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த நிலையில் தற்போது இவர்களின் திருமணம் நடைபெற்று உள்ளது.