“தள்ளாடும் வயதிலும் துணிந்து” துப்பாக்கியால் சுட்ட முதியவர்…. திகில் நிறைந்த வீடியோ…. பழனியில் பரபரப்பு…!!

முதியவர் ஒருவர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி அருகே அக்கரைப்பட்டியில் வசிப்பவர் இளங்கோவன். இவருக்கு சொந்தமாக பழனி அப்பர் தெருவில் 12 சென்ட் காலி மனை இருந்துள்ளது. அந்த இடத்தின் பக்கத்தில் திரையரங்கு உரிமையாளரான நடராஜன் வசித்து வந்துள்ளார். இந் நிலையில் இளங்கோவனுக்கு சொந்தமான இடத்தில், தனக்கும் கொஞ்சம் நிலம் இருப்பதாக நடராஜன் தொடர்ந்து கூறி வந்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தனது நிலத்தில் வேலி அமைப்பதற்காக இளங்கோவன் அங்கு சென்றுள்ளார்.

இதை அறிந்த நடராஜன் வேலி அமைப்பது எதிர்ப்பு தெரிவித்ததால், இளங்கோவன் தனது உறவினர்களான பழனிசாமி,சுப்பிரமணி ஆகியோரை கூட்டி சென்று நடராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதையடுத்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் ஆத்திரமடைந்த நடராஜன் தான் கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார். இதைப்பார்த்த இளங்கோவன் அங்கிருந்து தப்பி ஓடிய போது பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணி ஆகியோர் மீது குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீண்டும் வந்த இளங்கோவன் காயமடைந்த பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணியர் ஆகியோரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும்  தப்பியோடிய தொழிலதிபர் நடராஜனை கைது செய்துள்ளனர். வயிற்றில் குண்டு பாய்ந்து காயமடைந்த பழனிச்சாமியை கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *