“தளபதி 67” மீண்டும் இணையும் இயக்குனர்கள்…. வெளியான சூப்பர் நியூஸ்….!!!

தளபதி விஜய் படத்தில் இணைய போகும் இயக்குனர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் விக்ரம் மற்றும் மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கும்போது அவருடன் சேர்ந்து மேயாத மான், ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கிய ரத்தினகுமார் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார். மேலும் தளபதி 67 திரைப்படத்திலும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ரத்தினகுமார் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.