“தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடி இவர்தான்”…. சியான் விக்ரம் நடிப்பது குறித்து லோகேஷ் சொன்ன தகவல்…. வைரல் வீடியோ….!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கிய கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் தற்போது தளபதி 67 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிக்கும் நிலையில், கௌதம் மேனன், அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் மைக்கேல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிலையில் லோகேஷ் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

தளபதி 67 குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என்றார். இதைக் கேட்டு அங்கிருந்த மாணவர்கள் விசில் அடித்து கரகோஷம் எழுப்பியத்துடன் தளபதி 67 படத்தில் திரிஷாவுக்கும் விஜய்க்கும் ரொமான்ஸ் சீன்கள் இருக்குமா என்று கேட்டார்கள். அதற்கு லோகேஷ் படத்தில் கண்டிப்பாக பார்க்கலாம் என்றார். இதனால் விஜய்க்கு ஜோடியாக பல வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும் விக்ரம் படத்தில் நடிப்பாரா என்று மாணவர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அனைத்து அப்டேட்டுகளையும் உடனடியாக சொல்லிவிட்டால் ரகசியம் எதுவும் இருக்காது. பொறுத்திருங்கள் விரைவில் அதற்கான பதில் வரும் என்றார். இதனால் தளபதி 67 படத்தில் நடிகர் விக்ரம் நடிப்பது உறுதியாகிவிட்டதாக கூறுகிறார்கள். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.