தளபதி 67…. “படத்திற்கான வேலையை தொடங்கிய லோகேஷ்”….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

தளபதி 67 திரைப்படத்தின் லொகேஷனை தேர்வு செய்வதற்காக லோகேஷ் கனகராஜ் மும்பை சென்றுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ்  மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருகின்றார். இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தற்போது இத்திரைப்படத்தின் லொகேஷனை முடிவு செய்வதற்காக லோகேஷ் மும்பைக்கு சென்று இருக்கின்றாராம். தளபதி 67 திரைப்படம் மும்பையில் வாழும் ஒரு  கேங்ஸ்டரின் கதையாக உருவாக இருப்பதால் மும்பையில் படம் எடுக்க அங்கு லோகேஷனை தேர்ந்தெடுப்பதற்காக லோகேஷ் மும்பை சென்றிருக்கின்றாராம். இதை அறிந்த ரசிகர்கள் கூடிய விரைவில் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *