“தளபதி 67 திரைப்படத்தில் விஜயுடன் இணையும் கௌதம் மேனன்”….. 45 நாள் கால் சீட் டாம்….!!!!!!

தளபதி 67 திரைப்படத்தில் கௌதம் மேனன் நடிப்பதற்கு 45 நாள் கால் சீட் கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார்.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்றாலும் படத்தில் நடிப்பவர்கள் குறித்த தகவல் வெளியாகி வருகின்றது. இப்படத்தில் திரிஷா, பிரித்விராஜ், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பதாக  தகவல்கள் வெளியானது.

இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து நடிக்க 45 நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கின்றார் கௌதம் மேனன். இதன் வாயிலாக கௌதம் மேனனுக்கு ஒரு நல்ல கதாப்பாத்திரம் தான் கிடைத்திருக்கின்றது என்பது தெரிகிறது.