தளபதி 66…”காட்சிகளை கசியவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”… விஜய் ரசிகர்கள் கோரிக்கை…!!!!!!

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பீஸ்ட். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது.  இந்த நிலையில் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி  இயக்கத்தில் விஜய் நடித்து வருகின்றார். இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 66 என பெயரிடப்பட்டு இருக்கின்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகையாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் தளபதி 66 படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில போட்டோக்கள் வெளியாகி உள்ளது. இதனால் படத்தில் விஜய்யின் லுக் கசிந்துவிட்டது. தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் பகுதியில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்துள்ள நிலையில் லீக்கான விஜயின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனையடுத்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து காட்சிகளை வெளியிடுபவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் கேட்டு வந்தனர். இதனால் தற்போது படப்பிடிப்பை வேறு ஒரு தனி இடத்திற்கு மாற்றி இருக்கின்றார்கள் தயாரிப்பாளர்கள். இதற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

இதனால் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. புதிதாக செட் அமைக்கப்பட்ட பின் வரை படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. படத்தின் காட்சிகள் கசிந்ததால் அவற்றை மீண்டும் காட்சிப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தளபதி 66 திரைப்படம் ஏமோஷனல் ஃபேமிலி டிராமா வாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.