கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் மட்டும் விஜய் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். விஜயின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியானது கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித், விஜய் படங்கள் நேரடியாக மோதியதால் ரசிகர்கள் முதல் கோலிவுட் வட்டாரம் வரை அனைவரும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இருப்பினும் இரண்டு படங்களுமே சரிசமமான வெற்றியை பெற்று வசூல் ஆகியது. ஆனால் இவர்கள் இருவரின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியானதால் ரசிகர்களிடையே இணையத்தில் மோதல் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த மோதலை தடுக்கும் விதமாக ஒரு நல்ல தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரபல பாடகி சுசித்ரா சொன்ன ஒரு தகவல் தான். தற்போது அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுடைய மோதலை குறைத்துள்ளது. அதாவது சுசித்ராவை ஒரு பார்ட்டியில் பார்த்த அஜித் அவரிடம் நீங்க பாடிய பாடலிலேயே விஜயின் வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற சின்ன தாமரை பாடல் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அது எப்படி விஜய்க்கு மட்டும் நல்ல நல்ல பாட்டா அமையுதுன்னு தெரியலை என்று ஓபனாக பேசினாராம். இந்த தகவல் ஆனது தற்போது இணையத்தில் வேகமாக பரவுகிறது. எவ்வளவு தான் படத்தில் மோதல் இருந்தாலும். அஜித் விஜய், நல்ல நண்பர்களாகவே எப்போதும் இருந்து வருகிறார்கள் என்று ஒரு சில கருத்து சொல்ல இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.