தளபதி படத்தில் நடிக்க வாறீங்களா?…. NO சொன்ன நடிகர் கார்த்திக்…. எதற்காக தெரியுமா?…..!!!!!

வாரிசு படத்தை அடுத்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார். இப்படத்தை லலித் தயாரிக்கிறார். அதேபோல் அனிருத் இசையமைப்பார் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சஞ்சய்தத், டிரைக்டர் மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன் போன்றோர் வில்லன்களாக நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கார்த்திக்கிடம் படக்குழு பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். அப்போது கார்த்திக்  அந்த படத்தில் நடிக்க மறுப்பு  தெரிவித்துவிட்டார். காரணம் கார்த்திக் முட்டி வலி பிரச்சனையால் சிகிச்சை மேற்கொண்டு வருகிறாராம். தற்போது முழுமையாக முட்டு வலி சரியாகாததால் விஜய் பட வாய்ப்பை அவர் நிராகரித்துவிட்டார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.