தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தவர் ஷாம். அதன் பிறகு படங்களில் ஷாம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். நடிகர் ஷாம் தற்போது விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தில் அவருக்கு சகோதரராக நடித்துள்ளார். இந்த படத்திற்காக நடிகர் ஷாம் 60 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளார். இந்நிலையில் வாரிசு படத்திற்காக அழைப்பு வந்த அதே நேரத்தில் துணிவு திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பதற்கு நடிகர் ஷாமிடம் எச். வினோத் சென்று பேசியுள்ளார்.

இந்த கதை நடிகர் ஷாமுக்கு பிடித்துப் போகவே அவரும் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் வாரிசு படத்திற்காக ஒதுக்கியிருந்த அதே கால்ஷீட் நாட்களில் தான் துணிவு திரைப்படத்திற்கும் தேதிகள் கேட்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு படத்திற்கும் ஒரே நாளில் கால்ஷீட் ஒதுக்க முடியாது என்பதற்காக நடிகர் ஷாம் மிகுந்த வருத்தத்துடன் துணிவு படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் இயக்குனர் எச். வினோத்திடம் தன்னை அப்படி ஒரு கதாபாத்திரத்தில் யோசித்து நடிப்பதற்கு வாய்ப்பு வழங்க வந்ததற்காக ஷாம் அவருக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.