லோகேஷ் கனகராஜ் டைரக்டில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் சூட்டிங் பாதிக்கும் மேல் முடிவடைந்துவிட்டது. வருகிற அக்டோபர் 19-ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகும் என முன்கூட்டியே அறிவித்து விட்டதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை தடங்கல் இன்றி நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் தவிர்த்து இன்னும் பல குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

அதன்படி லேட்டஸ்டாக இந்த படத்தில் இணைந்துள்ளார் நகைச்சுவை நடிகர் வையாபுரி. இதற்கு முன்பாக வையாபுரி சினிமாவில் அறிமுகமான காலக்கட்டத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் வாயிலாக ரசிகர்களிடம் அதிகம் ரீச் ஆனார். அதன்பின் விஜய்யுடன் பிரியமானவளே, திருப்பாச்சி, சச்சின், போக்கிரி, வில்லு, காவலன் உட்பட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் லியோ படத்தில் விஜய்யுடன் வையாபுரி இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.