“தளபதியா 67 படத்தின் கதையைத் திரித்தி எழுதும் இயக்குனர்”…. அந்த டெக்னிக்கை பயன்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு…!!!!

தளபதி 67 படத்தின் திரைக்கதையை லோகேஷ் கனகராஜ் திருத்தி எழுதி வருகின்றார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது.

இந்த நிலையில் படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் பல ஆண்டுகளுக்கு முன்பாக எழுதியதாகவும் அது அவரின் கனவு படம் எனவும் தெரிவித்ததை தொடர்ந்து அண்மையில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிப் படமாக உருவாகி இருக்கின்றது. இத்திரைப்படத்தில் லோகேஷ் பயன்படுத்திய LCU டெக்னிக் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இந்த நிலையில் தளபதி67 திரைப்படத்தின் கதையை லோகேஷ் திரித்தி எழுதி வருவதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் LCU டெக்னீக்கை பயன்படுத்துவார் என எதிர்பார்க்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *