“தல அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்”…. 30 வருங்களுக்கு பிறகு மீண்டும் அமராவதி… டிஜிட்டலில் ரீ-ரிலீஸ்…!!!

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் கடந்த 1993-ம் ஆண்டு செல்வா இயக்கத்தில் வெளியான அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சோழா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்த அமராவதி திரைப்படத்தில் சங்கவி ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன் பிறகு இந்த படத்தில் தலைவாசல் விஜய், நாசர், சார்லி மற்றும் நிழல்கள் ரவி போன்றோரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரிலீஸ் ஆகி 30 வருடங்கள் ஆன நிலையில் தற்போது மீண்டும் அமராவதி திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படம் நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே 1-ஆம் தேதி டிஜிட்டலில் வெளியாகிறது. மேலும் இந்த தகவல் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.