தல அஜித் படம் பற்றி கேள்வி…. கோபமாக பதில் சொன்ன விக்னேஷ் சிவன்…. வைரலாகும் பதிவு….!!!!

டைரக்டர் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து ஏகே-62 திரைப்படத்தை இயக்க இருந்தார். எனினும் அந்த படம் திடீரென்று ட்ராப் ஆனது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இதுவரையிலும் தன் அடுத்த திரைப்படத்தை அறிவிக்கவில்லை. பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை விக்கி இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

எனினும் அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வரவில்லை. இந்நிலையில் விக்னேஷ் சிவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, அவரிடம் அஜித் திரைப்படம் பற்றி கேட்டதற்கு இது தேவையில்லாதா ஒரு கேள்வி. வேற கேள்வி இருந்தால் கேளுங்க பதில் சொல்றேன் என கூறினார். அதோடு அடுத்து ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் படம் எடுக்கிறீர்களா என கேட்டதற்கு இது irrelevant question என சொல்லி பதிலளிக்காமல் தவிர்த்தார்.