தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் வினோத் டைரக்டில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியிருந்த துணிவு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையொட்டி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. ஜிப்ரான் இசையில் உருவாகியிருந்த இந்த படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்தின் ஒரிஜினல் பேக்ரவுண்ட் ஸ்கோர் ஆல்பம் வெளியாகி இருப்பதை தன் சமூகவலைத்தளபக்கத்தில் தெரிவித்துள்ளார். அதோடு இப்படத்தில் பணியாற்றிய பயணத்திற்கும், அனைவருக்கும் நன்றி என பதிவிட்டிருக்கிறார். இப்பதிவை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.