தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 50 சடலங்கள் ..ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வெறிச்செயல் ..!!பிரிட்டனியர்களிடையே ஏற்பட்ட அச்சம் ..!!

மொசாம்பிக் நாட்டில் வெளிநாட்டவர்கள் 50 பேரின் தலையை வெட்டிக் கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயலை குறித்த  தகவல் வெளியாகியுள்ளது.

மொசாம்பிக் நாட்டில் பிரித்தானியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் 50 பேரின் தலையை வெட்டிக் கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் ஒன்றிலிருந்து 17 வாகனத்தில் வெளியேறிய வெளிநாட்டவர்களை ஐ.எஸ் பயங்கரவாதிகள் சரமாரியாக தாக்கி உள்ளதாகவும் அதில் பலரை பிணைக்கைதியாக வைத்து கொடூரமாக கொன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய எரிவாயு சேகரிக்கும் நகரமான பால்மாவில் 53,000 பேர்கள் குடியிருக்கும் அந்த பகுதியை 100 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.ஆனால் அதில் 1,400 குடியிருப்பாளர்கள் படகு மூலம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது .இந்நிலையில் தெருவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலங்கள் கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

மாயமானவர்களில் பிரிட்டனியர்கள்  இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அவர் கொல்லப்பட்டாரா  என்பது குறித்து பயம் பிரிட்டனிடையே இருப்பதாக கூறப்படுகிறது.