தலையில் கருப்பு முடி, முகக்கவசம்…. “APRIL FOOL” அதிபர் மனைவி இப்படி செய்யலாமா…? அதிர்ந்த நிருபர்கள்…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் விமான நிலையத்தில் பிராங்க் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மனைவி ஜில் பைடன் பிராங்க் செய்துள்ளார். அவர் கருப்பு நிற முடியை வைத்துக் கொண்டும், முகக்கவசம் அணிந்து கொண்டும் கலிபோர்னியாவில் இருந்து வாஷிங்டனுக்கு செல்லும் விமானத்தில் “ஜாஸ்மின்” என்ற பணிப்பெண் போல் வேடமிட்டு வந்துள்ளார். அப்போது விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் இனிப்பு வழங்கியுள்ளார். ஆனால் அவரை எவரும் கண்டுபிடிக்கவில்லை.

பின்னர் விமானம் தரையிறங்கியதும் ஜாஸ்மின் என்ற பணிப்பெண் போல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க வந்துள்ளார். பின்னர் ஜில் பைடன் தன்னுடைய கருப்பு நிற முடியை கழற்றி April Fools என்று கூறியுள்ளார். அப்போது அங்கே இருந்த பணியாளர்கள், பத்திரிக்கை நிருபர்கள் , பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து எந்த ஒரு புகைப்படக் காட்சியும் வெளியாகவில்லை. ஆனால் ஜில் பைடன் செய்த சேட்டையை பத்திரிக்கையில் செய்தியாக வெளியிட்டுள்ளனர்.