தலைமை நீதிபதி இருக்காங்க…! நிலைமை சரியில்லை…. உடனே நிறுத்துங்க… விமானம் தரையிறக்கம் …!!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே சென்ற விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு உடனேயே தரையிறக்கப்பட்டதாக கொல்கத்தா விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக எமர்ஜென்சி நிலை உருவானதாகவும், அப்போது விமானத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே இருந்ததாகவும் கூறியுள்ளார். விமானம் புறப்படும் போதே தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் உடனே கொல்கத்தாவிலேயே தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.