தலைமைச் செயலகத்தில் பரபரப்பு…. பெண் காவலர் மரணம்….!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் கவிதா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அமைந்துள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த மரம் சாய்ந்து விழுந்தது. அதில் அரக்கோணத்தை சேர்ந்த காவலர் கவிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *