தலைமுடி வளர்ச்சியை தூண்டும் முருகைக்கீரை சூப்… “வாரம் ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிடுங்க”…!!

தலைமுடி வளர்ச்சியை தூண்ட இந்த முருங்கைக்கீரை சூப்பை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் போதும். நல்ல பலன் கிடைக்கும்.

தேவையானவை:

முருங்கைகீரை – 2 கப்.
வெண்ணெய் 1 – டீ ஸ்பூன்.
கார்ன் ஃப்ளோர் – 1 டீ ஸ்பூன்.
உப்புத்தூள், மிளகுத்தூள் – சிறிதளவு.

செய்யும் முறை:

முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம். (வடிகட்டியபின் இதைச் சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.