தலைநகரில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு…. முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா அறிவிப்பு….!!

டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகின்ற 1 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தற்போது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உள்ளதால் விருப்பமுள்ள மாணவர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் நேரடியாக பள்ளிகளுக்கு வரலாம். ஒரே நேரத்தில் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்.

மேலும் 50% மாணவர்கள் மட்டும் நேரடி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும். பின்னர் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். இதுவரை 98% பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *