தலைக்கேறிய போதை… வீட்டை கொளுத்திய குடிமகன்… 6 பேர் பலி..!!

கோடாக்கில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் வீட்டை பூட்டிவிட்டு தீ வைத்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோடகு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மது போதையில் இருந்த நபர் ஒருவர் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தீ வைத்துள்ளார். இதில் வீட்டில் இருந்த 8 பேரில்  6 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடிபோதையில் இருந்த நபர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .குடிபோதையில் இருந்த நபரின் தவறால் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.