திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் அறிவழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அறிவழகன் வழக்கம்போல அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகே மது அருந்திவிட்டு நடனமாடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அறிவழகன் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 9 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அறிவழகனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.