தலைக்கு ஏறிய போதை…. பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த மகன்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னையில் உள்ள வேளச்சேரி நேரு நகரில், தாய் லட்சுமி மற்றும் மகன் மூர்த்தி வசித்து வந்தனர்.  மூர்த்தி என்பவர் குடி போதைக்கு அடிமையானவர்.  அதனால் தினமும் இரவில் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதைப் போன்று ஒரு நாள் குடித்துவிட்டு தன் தாயுடன் சண்டை போட்டிருக்கிறார்.  அதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்ததை அடுத்து,   ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றியது.  அதனால் மூர்த்தி  காய்கறி வெட்டும் அருவாமனையை எடுத்து பெற்ற தாய் என்று கூட எண்ணிப் பார்க்காமல் லட்சுமியின் வயிற்றில் வெட்டியுள்ளார்.  ஆனாலும் ஆத்திரம் அடங்காத மூர்த்தி, தன்னுடைய தாயின் உடம்பில் பல இடங்களில் வெட்டியுள்ளார். இ

தனால் படுகாயம் அடைந்த லட்சுமி கூச்சலிட்டுள்ளார்.  அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.  இதனைக் கண்ட மூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடினார். மேலும் சம்பவ இடத்திலேயே தாய் லட்சுமி உயிரிழந்துவிட்டார்.  இந்த புகாரின் பேரில் மூர்த்தியின் மேல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  இதனைத் தொடர்ந்து லட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் .  மேலும் பெற்ற தாயை மகனே வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *