ஆந்திரா மாநிலத்தில் உள்ள சக்திசாய் மாவட்டத்தைச் சேர்ந்த 22 ஐயப்ப பக்தர்கள் சுற்றுலா வேனில் சபரிமலைக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் அவர்கள் மீண்டும் ஆந்திரா நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை பிரசாத் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருதலைப்பட்டி பகுதியில் 4 வழிச்சாலையில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வெண் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரைத் தாண்டி சாலையில் மறுபுறம் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் சுக்குநூறாக நொறுங்கியதால் சிராமுலுநாயக் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனையடுத்து அமர்நாத், ரகுநாயக் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். இதனை பார்த்ததும் வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய பிரசாத்தை தீவிரமாக தேடி வருகிறார்கள்.