தலித் மாணவர் மீது கொடூர தாக்குதல்… காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

உத்திரபிரதேசத்தின் ஷாஜகான்பூரைச் சேர்ந்த தலித் மாணவரான அர்ஜுன் ராணா என்பவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த மாணவர் அங்குள்ள பாரதமாதா சிலைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஷூ அணிந்து கொண்டு மாலை அணிவிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த மாற்று சமூக மாணவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு அர்ஜுன் ராணா மீது கோபம் இருந்துள்ளது. இந்நிலையில் அர்ஜுன் ராணா கடந்த 23-ஆம் தேதி கல்லூரி மைதானத்தில் தனியாக நின்று கொண்டிருந்தபோது அங்கே வந்த மாணவர்கள் அர்ஜுன் ராணாவை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அர்ஜுன் ராணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாக்குதலை நடத்திய ஷபாஸ் யாதவ், சூர்யன்ஷ் தாகூர் உள்ளிட்ட மாணவர்களை போலீசார் தீவிரமாக  தேடி வருகின்றனர்.

Leave a Reply